Quantcast
Channel: International News, Local News, Press Release, Chennai Events - Chennaipatrika
Viewing all articles
Browse latest Browse all 6182

மனோகர் பாரிக்கர் புதிய தகவல்

$
0
0

புதுடெல்லி:சென்னையில் இருந்து கடந்த 22–ந் தேதி அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்ற இந்திய விமானப்படையின் ஏ.என்.-32 விமானம் காணாமல் போனது. அந்த விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

மாயமான விமானம் பற்றி இதுவரை உறுதியான எந்த ஒரு தகவலும் கிடைக்காத நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில், விமானப்படையின் ஏ.என்.-32 விமானம் மாயமானது தொடர்பாக மாநிலங்களவையில் இன்றும் கேள்வி எழுப்பப்பட்டது. இதுபற்றி தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா பேசுகையில், ‘விமானத்துடனான கடைசி தொடர்பு மற்றும் ரேடாரில் இருந்து மறைந்ததற்கு இடைப்பட்ட 30 நிமிடங்களில் நடந்தது என்ன? என்பது குறித்து அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். இதுபோன்ற சூழ்நிலைகளில் மாயமான விமானத்தின் கறுப்பு பெட்டியை பிரான்ஸ் நிறுவனம் ஒன்று கண்டறிந்துள்ளது. அதுபோன்ற நிறுவனங்கள் இப்போது தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதா?’ என்று கேட்டார்.

திருச்சி சிவாவின் கருத்தை ஆமோதித்து பேசிய டி.கே.ரங்கராஜன், மாயமான விமானம் எத்தனை ஆண்டு பழமையானது? என்றும், மிகவும் பழமையான விமானமாக இருந்தால் அது ஏன் இதுவரையில் பயன்பாட்டில் இருந்தது? என்றும் கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் விளக்கம் அளித்து பேசினார். அவர் கூறுகையில், “விமானம் திடீரென காணாமல் போனதால் நான் குழப்பமடைந்தேன். காணாமல் போன தகவல் இரண்டாம் ரேடாரில் பதிவாகி உள்ளது. முதன்மை ரேடார் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் செல்ல முடியாது. மேகங்கள் அதிகமாக இருந்ததால் வேறு பாதையில் விலகிச் சென்றுகொண்டிருப்பதாக விமானிகள் தெரிவித்தனர்.

விமானம் மாயமானதற்கு நாசவேலை காரணமாக இருப்பதற்கு வாய்ப்பு குறைவு. விமானத்தில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் கிடையாது. தேடும் பணியை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகின்றேன். விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தினரிடம் தேடுதல் பணி குறித்த தகவல்கள் உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டு வருகிறது. தேடும் பணிக்கு உதவுவதற்காக அமெரிக்காவிடம் இருந்து கடல் இமேஜரியை கேட்டுள்ளோம், எனவே இது தேடுதல் பணிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Manohar parrikar speaks about missing AN 32 Plane


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles