Quantcast
Channel: International News, Local News, Press Release, Chennai Events - Chennaipatrika
Viewing all articles
Browse latest Browse all 6182

2016 ஐஐஎஃப்டிசி இடங்கள் காட்சி

$
0
0

உலகின் மிகச் சிறந்த திரைப்படப் படப்பிடிப்பு இடங்களுக்கான சாளரம்

உலகின் மிகப் பெரிய திரைப்படத் துறையைச் சந்திக்க 10 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் 2016 ஐஐஎஃப்டிசி இடங்கள் காட்சியில் பங்கேற்பு

சென்னை: 2016 பிப்ரவரி 3:  இந்தியத் திரைப்படத் துறையின் தலைமை அமைப்பான இந்தியத் திரைப்படக் கூட்டமைப்புதனது வருடாந்திர திரைப்படச் சுற்றுலாக் கருத்தரங்கான 2016 ஐஐஎஃப்டிசி இடங்கள் காட்சியின்நான்காவது எடிஷன் குறித்த அறிவிப்பை வெளியிட்டது.  ஐஐஎஃப்டிசி இடங்கள் காட்சி சென்னையில் பிப்ரவரி 23 அன்று க்ரௌன் பிளாசா ஹோட்டலிலும், ஐதராபாத்தில் பிப்ரவரி 25 அன்று ராடிசன் ப்ளூ பிளாசாவிலும், மும்பையில் பிப்ரவரி 27 அன்று ஜுஹன் ஜே டபிள்யூ மேரியட்டிலும் நடைபெறும்.

மெர்குரி இண்டெக்ரேடெட் மார்க்கெடிங்க் சர்வீசஸ் நடத்திய ஆய்வின்படி ஒவ்வொரு ஆண்டும் 200க்கும் அதிகமான இந்தியத் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் உலகம் முழுவதுமுள்ள 50க்கும் அதிகமான நாடுகளில் நடைபெறுகின்றன.

ஐஐஎஃப்டிசி இடங்கள் காட்சியில் ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் பிரதிநிதிகளின் பங்கேற்பு, தொடர்ந்து அதிகரித்து வரும் வெளிநாட்டுப் படப்பிடிப்புகளின் சந்தையை இன்னும் விரிவுபடுத்த உதவும். 2016 ஐஐஎஃப்டிசி இடங்கள் காட்சியில் கென்யா, நாம்பியா, தென் ஆப்பிரிக்கா (குவாஜுலு நேடால்), ஃபிஜி, ஸ்பெயின், ஜெர்மனி, இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் கலந்து கொள்கின்றன.

இது பற்றி இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் தலைமைச் செயலர் சுப்ரான்சென் பேசுகையில் ‘நமது திரைப்படத் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து புதிய மற்றும் வித்யாசமான வெளிநாட்டுப் படப்பிடிப்பு இடங்களைத் தேடுகின்றனர்.

ஐஐஎஃப்டிசி இடங்கள் காட்சி மூலம் இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பு பிரபல இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் திரைப்படப்பிடிப்பு அரங்கு உரிமையாளர்களை ஒரே கூரையின் கீழ் வரவேற்று மகிழ்வதுடன்,  பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களிலிருந்து பங்கேற்கும் சுற்றுலாப் பிரதிநிதிகள் மற்றும் கலாச்சார அமைச்சர்களைச் சந்திக்கவும் உதவும்’ என்றார்.

ஐஐஎஃப்டிசி இயக்குனர் ஹர்ஷத் பகவத் கூறுகையில் ‘பயணத் திட்டத்தில் ஒரு இடத்தைப் பதிவு செய்யத் திரைப்படங்கள் முக்கிய ஊக்க சக்தியாகத் திகழும். பொருளாதார & கலாச்சார மதிப்பு, பிராண்ட் விழிப்புணர்வு மற்றும் ஆக்கப்பூர்வ உருப்பட உருவாக்கம் ஆகியவற்றிற்கான இடங்களில் பல்வேறு ஆக்கப்பூர்வ விளைவுகளைத் திரைப்படங்கள் ஏற்படுத்துகின்றன. ஐஐஎஃப்டிசி ஆதரவுடன் சுற்றுலா மேம்பாட்டிற்குத் திரைப்படங்களை ஊக்குவிக்க பி2பி தளமாகச் செயல்படுவதுடன், இந்தியாவில் உள்ள படைப்புத்திறன் துறைகளுக்கான இடங்களைத் தேடுவதற்குச் சாதகமான சூழலை உருவாக்குவதும் எங்கள் நோக்கமாகும்’ என்றார்.

பிரதிநிதிகள் கலந்து கொள்ள registeriiftc@gmail.comமின் அஞ்சல் அல்லது 91 22 26115042 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளவும். விவரங்களுக்கு  www.iiftc.inவலைதளத்தைப் பார்க்கவும்.

IIFTC Locations Show 2016 begins in Chennai


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles