இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்காவின் மொசாம்பிக், தென் ஆப்பிரிக்கா, தான்சானியா, கென்யா ஆகிய நாடுகளுக்கான 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.பயணத்தின் முதற்கட்டமாக ஆப்பிக்காவின் மொசாம்பிக் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் மொசாம்பிக் பயணத்தை முடித்து கொண்டு, அங்கிருந்து தென் ஆப்பிரிக்காவின் ப்ரிடோரியா நகருக்கு அவர் சென்றார்.
முன்னதாக, மொசாம்பிக் சுற்றுப்பயணத்தின் போது மபுடோ நகரில் உள்ள கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி மையத்திற்கு சென்ற பிரதமர் மோடி அங்குள்ள மாணவர்களிடையே கலந்துரையாடினார்.
பின்னர், கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி மையத்திற்கு பிரதமர் 4 பேருந்துகளை இந்தியா சார்பில் வழங்கினார்.