Quantcast
Channel: International News, Local News, Press Release, Chennai Events - Chennaipatrika
Viewing all articles
Browse latest Browse all 6182

மெஸ்சிக்கு 21 மாத சிறைத்தண்டனை

$
0
0

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பைனலில் சிலி அணியிடம் தோற்று அர்ஜென்டினா கோப்பையை இழந்தது. கடந்த ஆண்டும் இறுதிப்போட்டியில் சிலியிடம் தோற்றிருந்தது. இதனால் அந்த அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அணியின் தலைமை பயிற்சியாளரும் ராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில், வரி விதிப்பை தவிர்ப்பதற்காக போலி நிறுவனங்களை உருவாக்கியதாக மெஸ்சி மற்றும் அவரது தந்தை ஜார்ஜ் மீது ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதில், வரி ஏய்ப்பு செய்ததாக மெஸ்சி மற்றும் அவரது தந்தை இருவருக்கும் தலா 21 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மெஸ்சிக்கு 12 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் சட்டத்தின்படி, இரண்டு ஆண்டுகளுக்குள் தண்டனை பெற்றால் அதனை தற்காலிகமாக ரத்து செய்ய முடியும். எனவே, மெஸ்சி சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்காது.

இந்த தீர்ப்பை எதிர்த்து இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Messi and his father get 21 months jail due to tax case


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles