Quantcast
Channel: International News, Local News, Press Release, Chennai Events - Chennaipatrika
Viewing all articles
Browse latest Browse all 6182

ஜுனோ வியாழன் கிரகத்துக்குள் நுழைந்தது

$
0
0

வாஷிங்டன்:வியாழன் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக 110 கோடி அமெரிக்க டாலர்கள் செலவில் திட்டமிட்டு ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஏவப்பட்ட ஜூனோ விண்கலம் 170 கோடி மைல்கள் (270 கிலோமீட்டர்) கடந்து இன்று வெற்றிகரமாக வியாழனுக்குள் நுழைந்தது.

சூரியனிலிருந்து ஐந்தாவதாக அமைந்துள்ள வியாழன் (Jupiter) சூரிய மண்டலத்திலேயே மிகப்பெரிய கோள் ஆகும். வளி அரக்கக்கோள்கள் நான்கில் வியாழனும் ஒன்றாகும்.

சூரிய மண்டலத்தின் உட்கோள்களான புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகிய பாறைக் கோள்களைப் போன்றில்லாது, புறக்கோள்களில் ஒன்றான வியாழன் சூரியனைப் போல் வாயுக்கள் திரண்ட கோளமாகும். சூடான பாறையும், திரவ உலோகம் சிறிதளவு உட்கரு கொண்டிருந்தாலும், மேல்தளத்தில் திரட்சியான திடப்பொருள் எதுவும் வியாழனில் கிடையாது.

பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரமாகும் போது, மிகப்பெரிய வடிவம் கொண்ட வியாழன் 9 மணி 50 நிமிடத்தில், அதாவது வினாடிக்கு 8 மைல் வேகத்தில் வெகு விரைவாகத் தன்னைத்தானே சுற்றி விடுகிறது.

சூரிய சுற்றுப்பாதையில், சுமார் 484 மில்லியன் மைல் தூரத்தில், சூரியனைச் சுமார் 12 பூகோள ஆண்டுகளுக்கு ஒருமுறை வியாழன் சுற்றி வருகிறது. இந்த வியாழன் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா’ கடந்த 5-8-2011 அன்று புளோரிடா மாநிலத்தில் உள்ள கேப் கார்னிவல் ஏவுதளத்தில் இருந்து ‘ஜூனோ’ என்ற ஆளில்லா விண்கலத்தை விண்ணில் ஏவியது.

கடந்த ஐந்தாண்டுகளாக விண்வெளியை சுற்றிப் பயணித்த ஜூனோ இன்று வெற்றிகரமாக வியாழனின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது. அமெரிக்க நேரப்படி,4-ம் தேதி இரவு 11.53 மணியளவில் (இந்திய நேரப்படி இன்று காலை சுமார் 9 மணியளவில்) வியாழனுக்குள் ஜூனோ பிரவேசித்த வெற்றியை நாசா அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

110 கோடி அமெரிக்க டாலர்கள் செலவில் வியாழனை ஆய்வு செய்வதற்காக திட்டமிட்டு ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஏவப்பட்ட ஜூனோ விண்கலம் 170 கோடி மைல்கள் (270 கிலோமீட்டர்) கடந்து இன்று வியாழனுக்குள் நுழைந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.

Juno probe enters Jupiters orbit after 5 years


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles