சென்னையில் குழந்தைகளுக்கான உடற்பயிற்சி மையமான நியூட்ரியன்ஸ் கிட்ஸ் பிட்னெஸ் ஸ்டூடியோ துவக்கம்
சென்னை, பிப்.20- ஸ்ரே பவுண்டேஷனின் முன்முயற்சியால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஐஸ்பார்க் இன்று உடற்பயிற்சி மற்றும் முழுமையான மகிழ்ச்சியை குழந்தைகளுக்கு ஏற்படுத்துவதற்கான மையத்தை துவக்கியுள்ளது. ஐஸ்பார்க் நியூட்ரியன்ஸ் கிட்ஸ் பிட்னெஸ் ஸ்டூடியோ என்று இது அழைக்கப்படும்.
முழுமையான இந்த உடற்பயிற்சி மையம் இளம் தலைமுறையினருக்கு இயந்திர சாதனங்கள் இல்லாத உடற்பயிற்சிகளை கற்றுத்தரும் மையமாக திகழும். இதற்காக அமெரிக்காவில் இருந்து பிரத்யோகமாக தயாரிக்கப்பட்டுள்ள எளிய உடற்பயிற்சி சாதனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ஐஸ்பார்க் நியூட்ரியன்ஸ் கிட்ஸ் பிட்னெஸ் ஸ்டூடியோ மகிழ்ச்சியான ஆரோக்கியமான முழுமையான வாழ்க்கையை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு செயல்படும்.
1. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உடலுக்கு சக்தி அளிக்கக்கூடிய சரியான உணவு.
2. நாள்தோறும் ஒரு மணிநேரம் உடற்பயிற்சி.
3. நேரத்தை சரியாக நிர்வகிப்பது குறித்தும் மனதை ஒரு முகப்படுத்தவும் சவால்களை எதிர்கொள்ளவும் பயிற்சி.
4. தங்களுக்கு உள்ள வளத்தையும் சக்தியையும் இணைக்கவும் மேம்படுத்தவும் கற்றுத்தரும் பயிற்சி
ஆகியவற்றை திட்டங்களாக கொண்டு இந்த மையம் துவங்கப்பட்டுள்ளது. குழந்தைகள் சரியான நேரத்திற்கு சாப்பிடவும் தூங்குவதற்கும் செல்ல பழக்கத்தை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இயந்திர சாதனங்கள் இல்லாமல் அவர்களுக்கு ஏற்ற சூழலுடன் கூடிய எளிய உடற்பயிற்சி கருவிகளை கொண்டு உடற்பயிற்சியை செய்ய கற்றுத்தருதல், தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் குழந்தைகள் தங்களது குறிக்கோள்களை அடைய சரியான வழிகாட்டுதல்களை அளிக்கக்கூடிய வழிகாட்டுநர் உள்பட பல்வேறு செயல்பாடுகளுடன் கூடியது தான் இந்த ஐஸ்பார்க் நியூட்ரியன்ஸ் கிட்ஸ் பிட்னெஸ் ஸ்டூடியோ ஆகும்.
குழந்தைகளை இயந்திரத்தனமாக வளர்க்காமல் ஆரோக்கியமான மற்றும் உறுதிமிக்க உடலை கொண்டவர்களாக வளர்ப்பதே எங்களது நோக்கம் என்று ஸ்ரே பவுண்டேஷன் தலைவர் டாக்டர் எச்.பி. கனோரியா கூறினார். குழந்தை பருவத்தில் இருந்து வயது வந்த பருவத்தை எட்ட நாம் மேற்கொள்ளும் பயணம் அற்புதமானது என்றுகுறிப்பிட்ட ஐஸ்பார்க் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான திருமதி மனிஷ் லோஹியா குழந்தைகளுக்கு முழுமையான உடற்பயிற்சி மையம் மிகவும் அவசியமானது என்றார்.